Inspired to write this:
அன்பற்ற ஆசாரம் பழுது
நேயமற்ற நோம்பிலும் நேர்த்தி குன்று
மனிதம் இல்லா மந்திரம் வீண்
வாய்மையில்லா வேதமும் விரயம்
ஆர்வமற்ற கலை அப்பழுக்கு
உயிரற்ற ஓவியம் விலை போகா
இனிமையில் சொல்லும் சுடும்
இசைவில்லா முயர்வு தோல்வியே
நம்பிக்கையற்ற நெறி தவறும்
உருக்கமற்ற கதையும் கவராது
கனவில்லா துயில்வும் சுகமில்லை
ரசனையற்ற மனமும் வெறுமை
பொருளில்லா புத்தகம் பலனில்லை
மணம் இல்லா மலர் சூடுவதற்கில்லை
மக்கள் இல்லா செல்வம் மங்கும்
பேணுதல் இல்லா உறவு கெடும்
ஆக்கமில்லா செயலும் செல்லாக்காசு
பிடிப்பில்லா வாழ்வு பாழ்
நோக்கமில்லா மார்கம் தடுமாற்றம்
தூய்மையற்ற அகமும் விளங்காது
சமத்துவம் இல்லா சமூகம் அவலமே
சமநீதி இல்லாத சமயம் அயோக்கியம்
மானுடமற்ற மதம் மூர்க்கம்
ஆறறிவு கேட்ட மனிதன் ஜடம்
உன்னதமில்லா எதுவும் உயர்வன்று
ஒளியற்ற ஆலையம் கேடு
சீரற்ற வழி செம்மை இல்லை
பகுத்தறிவற்றாரை கடவும் கடந்து போகும்…