Posted in Women & Family

பூவல்ல பூகம்பம்

The following was drafted for a brief speech, more like exchange of ideas in verses, at Thamizh Koottam, an informal Tamil gathering. Otherwise my preferred medium for amateur blogging is English language. A few rare Thamizh posts here.

Some corrections pending, mostly ‘yaranaa vazhanaa’ kind to put it in Tamil.

பூவல்ல பூகம்பம்

மலரோடு பெண்ணை ஒப்பிடாதீர்… பெண் மலர் போல மிருது அல்ல. பெண் பூ போல அல்ல. பூகம்பம் போல.

பெண்ணை பூவோடு ஒப்பிடுவதிற்கு தமிழ் திரை உலகமும் காரணமாக இருக்கலாம்.

ஐம்பதுகளில் அரங்கேற துவங்கியது இந்த நாடகம்.

‘மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள் என்று துவங்கும் பாசமலர் பாடல். நமக்கெல்லாம் பிடித்த ஒன்று. அடுத்த வரி ‘அண்ணன் வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்’ என்பது.

இதில் பாருங்கள் எப்படி ஒரு கருத்து திணிக்கப்படுகிறது என்பதை.

ஆண் வர்க்கம் பார்த்துக்கொள்ளும் தமக்கையே, கவலை படாதே.  ஆண் இருக்க பயமேன். இதுவே இதன் பொருள் உள்ளடக்கம். ஏன் பெண் தனித்து தன்னை காத்து கொள்ள மாட்டாளா. பாசமாகிலும் கட்டிபோடுவது ஏற்குமா.

‘ரோஜா மலரே ராஜகுமாரி’இதுவும் பிரபல பாடலே. பராசீகதில் இருந்து இரக்குமாதி செய்யப்பட்ட பூவகை அல்லவா ரோஜா. உயர் சாதி மலர். ராஜகுமாரியை ரோஜா மலராக உருவக படுத்துதலின் காரணம். சமூக ஏற்றத்தாழ்வுகளை கூட நாசூக்காக புலப்படுத்தும் வரிகள்.

‘மலரே குரிஞ்சி மலரே’ என்று துவங்கம் ஓரு பாடல். அடுத்த வரி ‘தலைவன் சூட நீ மலர்ந்தாய்’ . பெண்ணின் வாழ்க்கை குறிக்கோளே ஆணை அடைவது தான் என்பது போல.

ஆகா, பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பூக்கும் அபூர்வ குறிஞ்சி மலராகவே இருந்தாலும் சரி, பெண் என்பவள் பிறப்பே ஆணிற்காகத்தான் என்று உரைப்பது

தற்காலத்திலும் தொடரும் கதை இது.

‘மலரே மௌனமா’ என்று ஒரு பாடல். மலரை பெண்ணுக்கு உருவமாகவே கொள்ளும் வரிகள் இதை நாங்கள் என்ன பூச்செண்டு கொடுத்து வரவேற்க வேண்டுமா என்ன.

ஆங்கிலத்தில் சொல்வார்கள் இதை. Pun என்று. Pun intended here.

மலர் தான் மௌனம் காக்க வேண்டுமா என்ன. பூகம்பத்தை கிளப்பும் எரிமலையும் அமைதி காக்கும் பல நேரம். பெண் குமுறினால் அந்த குழம்பில் உருகாதவர் எவர்

பெண்ணை மூளை சலவை செய்து செய்தே அடிமை படுத்தியது போதும்.

இந்தியாவும் ஒரு இந்திராவை பார்த்துள்ளது. லங்கையும் பண்டாரா நயிகாவையும் சந்திரிகாவையும் கண்டுள்ளது.பூ என்று தான் என்னை கொள்வீர் எனில், சேற்றில் முளைத்த செந்தாமரை நான். ஆதாரமற்ற ஆகாய தாமரை அதிலும். இது போல. என் நிலைக்கு நீர் உமது வேட்டியை மடித்து கட்டி தான் கீழிறங்க வேண்டும். இது தலையை குனியாத தாமரை.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.