Posted in Lateral Thinking

தமிழ் பாடம்

தமிழில் எழுத முடியாததென்பது இல்லை. ஆனால் இன்னொரு ராஜேஷ் குமராக, புஷ்ப தங்கதுரையாக, பட்டுக்கோட்டை பிரபாகராக அவதரிக்க எனக்கு விருப்பம் இல்லை அவ்வளவு தான்! ஆங்கிலத்தில் எவ்வளவோ படிக்கிறோம் பகிர்கிறோம். ஆனால் விரசம் கலந்த தமிழ் பக்கங்களை என்னால் படிக்க இயலுவதில்லை. அது தாய் மொழி மீது நான் வைத்த மரியாதையா என்று எனக்கு தெரியாது. தமிழில் சிறிதளவும் கொச்சையாக பட்டால் என்னால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. ஆங்கிலம் பரவாயில்லை. சங்க நூலகளில் பள்ளி நாட்களில் படித்திருக்கிறோம் ஆனால் அந்த தமிழே வேறு. வெறும் சென்சேஷனலிசத்திற்காகவே தமிழில் சிலர் சில வாறு எழுதிகிறார்களோ என்று இப்போது தோன்றிகிறது. ஆனால் அதை திட்டமாக சொல்ல நானும் தமிழில் அதிகம் படித்ததில்லை. அரைத்த மாவையே எதுக்கு அரைக்க. வித்யாசமான, சமூக சூழ்நிலையை ஆராயும் தமிழ் நூல் பிடிக்கும் இன்னமும். யதார்த்தம் நிறைந்த சுஜாதா மற்றும் பாலகுமாரன் கூட நான் படித்ததில்லை. ஒரே காரணம், பள்ளி வயதிலேயே நினைப்பேன், இது வெளிதாக்கம் என்று. அப்போ நம்ம ஒரிஜினலையே படித்து விடலாமே என்று தான் தோன்றும். தமிழ் மீது பெரிய பற்று என்றுமே கிடையாது. என் வாழ்க்கையை தமிழ்நாட்டுக்கு வெளியே நான் ஐம்பது சதவீதம் வாழ்துள்ளதாலோ என்னவோ, ஒரே குட்டைல ஊறுகிற மட்டையாக விருப்பமில்லை. ஹிந்தியிலும் பெரிய மேதை கிடையாது. ஆனால் சின்ன தோஹே அல்லது சினிமா பாடல் வரியை கேட்டாலும் அந்த மென்மை என்னை வருடும். எந்த பாஷாயுமே உசத்தி இல்லை தாழ்த்தி இல்லை. உருது கலந்த ஹிந்தி வரிகள் மிக்க இஷ்டம். எனக்கு தெரிந்த மட்டில் காதலை அதைவிட அனுபவித்து வார்த்தையில் எழுத வேறு சிறந்த மொழி இல்லை. Spiritually கூட Sufi யை ஆழ்ந்து ரசிப்பேன். தமிழில் கூட கடவுளை அவ்வளவு கண்டதில்லைன்னு சொல்லலாம். நானும் தேவாரம் திருவாசகம் கேட்பவள் தான். மொழியின் உருக்கம் அப்படி. மலையாளம் நாவில் புரள்வது சுலபம், சரளமாக விளையாடும். எனக்கு மிக பிடித்த மொழி. மலாய் மொழி மிக மிருதுவானது. அரபி கூட. எந்த மொழி தான் அழகில்லை. கேட்க கேட்க தான் தெரியும் அந்த உண்மை. தமிழை அதனால் உதறி தள்ள வில்லை. ஆனால் தமிழில் ஏன் consonants and phonetics பல இல்லை. bha, dha, gha இல்லாதது மட்டுமல்ல sha, sa, ha வும் வடக்கில் இருந்து தருவிக்க பட்டதே. 247 எழுத்துக்களை வைத்து எல்லா consonants and phonetics களையும் எப்படி இந்த மொழியால் உருவாக்க முடியாமல் போனது. இருபத்தியாரே எழுத்துக்களில் கிழித்து விட்டானே வெள்ளைக்காரன். சமஸ்க்ரிதமும் ஹிந்தியும் கூட எவ்வளவோ மேல். எல்லாவற்றையும் objective ஆகா பார்க்காமல் subjective ஆகா பார்த்தால் இந்த உண்மை புரியும். ..இந்த மொழியின் பலவீனம் நம் தமிழர் எல்லோரிடமும் உள்ளதே. ஆங்கிலேயரின் மூளையே மூளை. தங்க கம்பி என்று எடுத்து கண்ணில் குத்திக்கொள்ள முடியாது. உண்மை உரைக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் எனக்கும் உயிர் தான் மறுப்பதற்கில்லை. அதன் குறை நிறையோடு தமிழின் மீது நான் வைத்திருப்பது அன்கண்டிஷனல் லவ். தாய்மொழி அல்லவா. தமிழின் நெளிவு சுளிவுகளை புரிந்தவள் தான். ஆழத்தையும் விரிவையும் தொன்மையையும் அறிந்தவள் தான். By default நான் தமிழச்சி. தமிழ் நாட்டுக்கு வெளியே எப்பொழுதும் நான் அதை மறப்பதற்கில்லை.